பாலக்கோடு:
பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து கங்கை, கணபதி பூஜை நடந்தது. நேற்று அம்மனுக்கு அபிஷேகம், பூக்களால் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு கிராமமக்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.