தமிழக செய்திகள்

அம்மாபேட்டை குறிச்சியில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

அம்மாபேட்டை குறிச்சியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டா

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதிகேசவன். இவருடைய மகன் பாலகுரு (வயது 27). இதேபோல் அம்மாபேட்டையை அடுத்த குறிச்சி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் திவ்யபாரதி (24). சென்னையில் உள்ள நண்பர் வீட்டுக்கு திவ்யபாரதி சென்றபோது அவருக்கும், பாலகுருவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவன்- மனைவி 2 பேரும் குறிச்சிக்கு வந்து வசித்து வந்தனர். இவர்களுக்கு நித்திஷ் கண்ணா (4), நிலன் கிருஷ்ணா (1) என்று இரு மகன்கள் உள்ளனர். குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பாலகுரு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலகுரு மனமுடைந்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...