தமிழக செய்திகள்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோவுக்காக மாணவாகளிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோவுக்காக மாணவாகளிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டினார்கள். இந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு எதிரொலியாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின்பு தான் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் வரவேற்றுள்ளனர்

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் , 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோவுக்காக மாணவாகளிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தோவு வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போதுள்ள நிலையே தொடரும் எனவும் ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு