தமிழக செய்திகள்

வருவாய் நிர்வாக ஆணையராக அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு

நீர்வளத்துறை செயலாளர் மணிவாசனுக்கு ஊழல் தடுப்புப்பிரிவு ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள இவர் சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவராக நியமிக்கப்பட்டார். அண்மையில், இவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, வருவாய் நிர்வாக ஆணையர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், எஸ்.கே.பிரபாகர் கவனித்து வந்த துறைகள் வேறு இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில்,

எஸ்.கே.பிரபாகர் கவனித்துவந்த கண்காணிப்பு ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் பொறுப்பை, நீர்வளத் துறை செயலர் க.மணிவாசன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். அதேபோல், எஸ்.கே.பிரபாகர் வகித்த வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச்செயலாளர் பி.அமுதா கவனிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்