இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவாரூர் மாவட்ட நேருயுவ கேந்திரா மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் இருந்து அமுத கலசத்தில் மண் சேகரிக்கப்பட்டு ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கொண்டு செல்லப்பட்டு தேசிய தலைவர்களின் நினைவாக சுதந்திர அமுத தோட்டம் புது டெல்லியில் உருவாக்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒன்றிய அளவிலான அமுத கலச யாத்திரை ஊர்வலம் வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. ஊர்வலத்தை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தொடங்கி வைத்தார். இதில் திருவாரூர் நேருயுவகேந்திரா திட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் பேசினார். நிகழ்ச்சியில் முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் மற்றும் விரிவுரையாளர்கள், அஞ்சல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.