தமிழக செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை தரதரவென இழுத்துச் சென்று பலாத்காரம்... 18 வயது சிறுவன் கைது

82 வயது மூதாட்டியை 18 வயது சிறுவன் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

எண்ணூர், அன்னை சிவகாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னி (வயது 82). ஆதரவற்ற இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் உணவு கொடுத்து உதவி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 25-ந் தேதி சாலையோரத்தில் மூதாட்டி உயிரிழந்து கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த எண்ணூர் போலீசார், மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மூதாட்டி பொன்னி பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலிசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்,நள்ளிரவில் அந்த வழியாக வந்த மர்ம வாலிபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தன.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து எர்ணாவூர் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.விசாரணையில் சிறுவன், மூதாட்டியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

82 வயது மூதாட்டியை 18 வயது சிறுவன் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு