கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

“கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகள் தேவை” - மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்கக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதுவரை 3.59 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 44 சதவீதமும், இரண்டாம் தவணைத் தொகை 15 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரே நாளில் 10,000 தடுப்பூசி முகாம்கள் மூலம் 20 லட்சம் தடுப்பூசிகள் போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவையாக உள்ளது.

இந்நிலையில், சிறப்பு முகாம் நடத்த இருப்பதால் கூடுதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசி தேவை என்று கூறி, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை