தமிழக செய்திகள்

அறிவிப்பு வெளியான ஒரே நாளில் என்ஜினீயரிங் படிப்பில் சேர 23 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அறிவிப்பு வெளியான ஒரே நாளில் என்ஜினீயரிங் படிப்பில் சேர 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

சென்னை,

இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி ஆகும். இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட அதிகரிக்கும் என்று உயர்கல்வி துறை எதிபார்த்து இருக்கிறது.

அந்தவகையில் அறிவிப்பு வெளியான முதல்நாளான நேற்று வரை 23 ஆயிரத்து 583 பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், இதில் 11 ஆயிரத்து 121 பேர் விண்ணப்பத்துக்கான கட்டணத்தை செலுத்திவிட்டதாகவும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்து இருக்கிறது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இனிவரக்கூடிய நாட்களில் மாணவ-மாணவிகள் பலரும் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்