கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு..!

புதுச்சேரியில் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை தற்போது 781 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக டெல்லியில் 238 பேருக்கும், மராட்டிய மாநிலத்தில் 167 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதித்து காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற இந்த முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக புதுச்சேரியில் ஓமைக்ரான் வைரஸ் தற்போது இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து