தமிழக செய்திகள்

பூந்தமல்லி நகராட்சியில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அவதி

பூந்தமல்லி நகராட்சியில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு ராஜாமணி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் இங்குள்ள ஒரு சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக இந்த பகுதியில் 3 சாலைகளாக பிரிந்து வளைவு, நெலிவுடன் இருக்கும் நிலையில் சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனை கண்டு கொள்ளாமல் நகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் தார் சாலையை புதிதாக அமைத்துள்ளனர்.

மேலும் இங்குள்ள மின்கம்பத்தை அகற்றாததாலும், போதிய முன் எச்சரிக்கை பலகை ஏதும் இல்லாததாலும் இரவு நேரத்தில் வரக்கூடிய வாகன ஓட்டிகள், சாலையின் நடுவே இருக்கக்கூடிய மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன்பு சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற மின்வாரிய அதிகாரிகளும், நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு