தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி ஊழியர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

எந்திரத்தில் சிக்கினார்

விருதுநகர் மாவட்டம் அப்பநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் முனுசாமி (வயது 28). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வாடகை வீட்டில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முனுசாமி வேலை செய்து கொண்டிருந்த போது எதிர் பாராத நேரத்தில் அங்கு இருந்த எந்திரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

சாவு

உயிருக்கு ஆபத்தான நிலையில் முனுசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பிள்ளைபாக்கம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து சென்று முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு