தமிழக செய்திகள்

மின்சாரம் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

கரூரில் மின்சாரம் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

தனியார் நிறுவன ஊழியர்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 39). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனால் சதாசிவம் தனது மனைவி கொம்மாயியுடன் கரூரில் உள்ள கரூர்-மதுரை பைபாஸ் சாலை பகுதியில் தனியாக வீடு எடுத்து குடியிருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி சதாசிவம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேல செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சதாசிவம் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

பலி

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் சதாசிவத்தை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சதாசிவம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து