தமிழக செய்திகள்

'வாட்டர் சர்வீஸ்' செய்யும் கடையில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

சென்னை கொடுங்கையூரில் ‘வாட்டர் சர்வீஸ்’ செய்யும் கடையில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலியானார்.

தினத்தந்தி

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 6-வது பிளாக்கைச் சேர்ந்தவர் சுமதி. இவருடைய மகன் ஆகாஷ் (வயது 20). இவர், கொடுங்கையூர் விவேகானந்தா நகர் காளமேகம் தெருவில் உள்ள ஒரு 'வாட்டர் சர்வீஸ்' கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று ஆகாஷ், மோட்டார் சைக்கிளை 'வாட்டர் சர்வீஸ்' செய்வதற்காக மின்மோட்டார் 'சுவிட்ச்சை ஆன்' செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு காண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி கொடுங்கையூர் போலீசார், 'வாட்டர் சர்வீஸ்' கடை உரிமையாளர் யுவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்