தமிழக செய்திகள்

பல்லாவரம் ரெயில் நிலையத்தில் ரெயிலின் அடியில் சிக்கிய முதியவரால் பரபரப்பு

பல்லாவரம் ரெயில் நிலையத்தில் ரெயிலின் அடியில் சிக்கிய முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று மாலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. பல்லாவரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பகுதியை முதியவர் ஒருவர் கடக்க முயன்ற போது, ரெயில் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் செய்வதறியாது திகைத்த நிலையில் திடீரென தண்டவாளத்தில் படுத்தார். இதைப் பார்த்து திகைத்த ரெயில் என்ஜின் டிரைவர் அவசரமாக பிரேக் பிடித்தார். இருந்தபோதிலும் முதியவர் படுத்து கிடந்த இடத்தை தாண்டி ரெயில் பாதியில் நின்றது. இதனால் முதியவர் ரெயிலுக்கு அடியில் சிக்கி கொண்டார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் அலறினர்.

உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் தண்டவாளத்தில் அடியில் சிக்கிய முதியவரை மீட்க முயன்றனர். நீண்ட தூரம் தவழ்ந்த நிலையில் தண்டவாளத்தில் இருந்து ரெயிலுக்கு அடியில் சிக்கியவர் மீண்டு வெளியில் வந்தார்.ரெயில்வே போலீசார் அவரை மீட்டு விசாரித்தபோது, அவர் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை சேர்ந்த ரவி (வயது 66) என தெரியவந்தது. பல்லாவரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தவர் ரெயிலில் ஏற வரும் பொழுது மதுபோதையில் தண்டவாளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பல்லாவரம் ரெயில் நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்