தமிழக செய்திகள்

தென்காசி: கந்துவட்டி தொழில் செய்த முதியவர் கழுத்தறுத்து கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்

புளியங்குடி அருகே கந்துவட்டி தொழில் செய்த முதியவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

புளியங்குடி,

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும் செவல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா என்ற பழைய கருப்பையா(வயது62).

இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்கள். இவரது மனைவி மகன் முத்துக்குமாருடன் இலவங்குளம் கிராமத்தில் இருந்து வருகிறார்.

இதனால் முதியவர் கருப்பையா மட்டும் நெல்கட்டும்சேவல் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை தன் வீட்டுக்குள் படுத்து இருந்த கருப்பையாவை அடையாளம் தெரியாத நபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

தகவலறிந்த புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கொலை செய்யப்பட்ட கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு