தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவரின் கால் முறிந்தது

மோட்டார் சைக்கிள் மோதி முதியவரின் கால் முறிந்தது.

அரிமளம்:

மதுரை கணக்கன்குளம் வெங்கலமூர்த்தி தெருவை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 65). இவர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழாநிலைக்கோட்டைக்கு வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பெத்தபெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்றார். அப்போது பின்னால் திருமயம் தாலுகா மாவடிப்பட்டி மேலத்தெருவை சேர்ந்த கருப்பையா(54) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கலைவாணன் மீது மோதியது. இதில் கலைவாணனுக்கு கால் முறிந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கலைவாணன் கொடுத்த புகாரின்பேரில் கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...