சென்னை,
கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்பு படையின் தலைமை கமாண்டராக, ஐ.ஜி.ஆனந்த் பிரகாஷ் பதோலா சென்னையில் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
ஆனந்த் பிரகாஷ் பதோலா இந்திய கடலோர காவல் படையில் கடந்த 1990-ம் ஆண்டு சேர்ந்தார். கடலோர காவல் படையில் உள்ள பல்வேறு கப்பல்களில் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். இவர் கடலோர பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தின் முதன்மை இயக்குனர் (நிர்வாகம்), டெல்லி கடலோர பாதுகாப்பு படை நிலையத்தின் கமாண்டிங் அதிகாரி, கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்பு படையின் மூத்த இயக்கக அதிகாரி (தலைமை அலுவலகம்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முக்கிய பணியாற்றியுள்ளார்.
ஆனந்த் பிரகாஷ் பதோலா உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.
மேற்கண்ட தகவல் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.