தமிழக செய்திகள்

பாரா ஆசிய பேட்மிண்டனில் 3 பதக்கங்கள் வென்ற துளசிமதி முருகேசன்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

ஜப்பானில் நடந்து வரும் பாரா ஆசிய பேட்மிண்டனில் ஒரு தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வென்றிருப்பது மகிழ்ச்சி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பேட்மிண்டன் ஆட்டத்தில் ஒரு தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

பாரா ஆசிய பேட்மிண்டனில் 3 பதக்கங்கள் வென்ற துளசிமதி முருகேசன்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பேட்மிண்டன் ஆட்டத்தில் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம், மகளிர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரா ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வரும் துளசிமதி முருகேசன் பேட்மிண்டன் ஆட்டங்களில் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT