தமிழக செய்திகள்

ஆண்டிப்பட்டியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.4½ லட்சம் கையாடல்

ஆண்டிப்பட்டியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.4½ லட்சம் கையாடல் செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகரில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மதுரை மாவட்ட வட்ட மேலாளர் பால் (வயது 52) ஆண்டிப்பட்டி போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், தேனி அல்லிநகரத்தை சேர்ந்த சதீஷ்குமார், புள்ளிமான்கோம்பை பகுதியை சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்தனர். அவர்கள் வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக புகார் வந்தது. அதன்பரில் நிறுவன அதிகாரிகள் கணக்கு தணிக்கை செய்தனர். அப்போது சதீஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 519-யை செலுத்தாமல் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதனால் அவர்களிடம் பணத்தை திருப்பி செலுத்தும்படி அதிகாரிகள் கூறினர். ஆனால் அவர்கள் பணத்தை செலுத்தாமல் தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்