தமிழக செய்திகள்

அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு

அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் 7.9.2021 அன்று, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.அதை செயல்படுத்தும் விதமாக, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தி ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியாளர்கள் பயன்பெற்று வருவதைப் போல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறும் வண்ணம், அவர்களின் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் 40 ஆயிரத்து 601 அங்கன்வாடி உதவியாளர்கள் பயனடைவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்