தமிழக செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பத்மாவதி தலைமை தாங்கினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் பரிதாபேகம், சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் குணசீலன், பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுரை மாவட்டம் சிம்மக்கல் அங்கன்வாடி ஊழியர் அம்சவல்லியின் இறப்புக்கு காரணமான ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், வட்டார ஒருங்கிணைப்பாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதல் பொறுப்புகளால் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதேபோல் பிற துறைகளின் பணிகளை வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு