தமிழக செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தினத்தந்தி

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செல்போன் வழங்கி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் புதிய செல்போன் வழங்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5 வருடம் பணி முடித்த அங்கன்வாடி உதவியாளருக்கு அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் தேவி கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் திருமலை முருகன், வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர், மகளிர் துணை குழு அமைப்பாளர் செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் துரைசிங் நிறைவுறையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்