தமிழக செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

தினத்தந்தி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகள் பணிபுரிந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகன், மாவட்ட நிர்வாகி செண்பகம், சங்க மாவட்ட செயலாளர் ஞானம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஜூலிற்றா, நிர்வாகிகள் சிவசக்தி, மலை பகவதி, மீனா பாய், பூங்கோதை, ராஜேசுவரி, கோமதி, ஓமணா, மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்