தமிழக செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஏர்வாடி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தினத்தந்தி

ஏர்வாடி:

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத காலம் விடுமுறை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் சிலிண்டர் பில்லில் உள்ள தொகையை முழுமையாக வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஏர்வாடி அருக மாவடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி பூலுடையார் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர்கள் வசந்தா பாய், கல்யாணி, வட்டார துணை செயலாளர் தங்கரூபி, பொருளாளர் பாலபிரின்சி, மாவட்ட துணை தலைவர் மீனாபாய் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா