தமிழக செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தினத்தந்தி

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை வட்டார அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பேபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா, ஒன்றிய செயலாளர்கள் சுகுணா, கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் தேவமணி, மாவட்ட தலைவர் ரவீந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் வேம்பு உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். காலிப்பணியிடங்கனள உடனடியாக நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகள் பணிமுடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட துணைசெயலாளர் மணிமேகலை நன்றி கூறினார். இதேபோல் செம்பனார்கோவிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஷகிலா பானு தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதிய சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் வள்ளியம்மாள், செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்