தமிழக செய்திகள்

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி -ஓ.பன்னீர் செல்வம்- மு.க.ஸ்டாலின் மாலை அணிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி -ஓ.பன்னீர் செல்வம்- மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தனர் மரியாதை செலுத்தினார்கள்.

தினத்தந்தி

சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று அவரது உருவச்சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மதுசூதனன், முனுசாமி, செம்மலை, மைத் ரேயன் எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்க மணி, வேலுமணி, டி.ஜெயக்குமார், துரைக் கண்ணு, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார். சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., முதன்மை செயலாளர் துரைமுருகன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு