தமிழக செய்திகள்

அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

மயிலாடுதுறையில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

நெடுந்தூர ஓட்டப்போட்டி

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரால், "அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாசாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. ஓட்ட போட்டியும், பெண்களுக்கு 5 கி.மீ. ஓட்ட போட்டியும் நடக்கிறது.

2 பிரிவுகள்

25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. ஓட்டபோட்டியும், பெண்களுக்கு 5 கி.மீ. ஓட்டப்போட்டியும் என 2 பிரிவின் கீழ் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்புக்கொள்ளலாம். 2023-2024-ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி சிறப்பாக நடந்திடும் பொருட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தலாம்.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை