தமிழக செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% உயர்வு - மாணவர்கள் அதிர்ச்சி

50% தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% அதிரடியாக உயர்ந்துள்ளது. இளநிலை பொறியியல் படிப்பு தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தேர்வுக்கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இளநிலை செய்முறை சமர்ப்பிப்பு ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்ய ரூ.600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் ரூ.900ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2,050 கட்ட வேண்டிய சூழல் நிலவியுள்ளதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் 50% தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது