தமிழக செய்திகள்

கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம்

கைலாசபட்டி கைலாசநாதர் கோவிலில் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமிக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில், தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்து சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை வர்த்தக பிரமுகர் பாண்டியராஜ் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்