தமிழக செய்திகள்

அன்னை மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

அன்னை மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

 புன்னம்சத்திரம், டி.என்.பி.எல். சாலையில் உள்ள அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மோகனகாந்தி வரவேற்று பேசினார். அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனர் மலையப்பசாமி தலைமை தாங்கினார். அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் தலைவர் தங்கராசு முகவுரையாற்றினார். கல்லூரி முதல்வர் சாருமதி கல்லூரியின் பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரியின் சிறப்பம்சங்கள் பற்றி தொடக்க உரையாற்றினார். கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் சுதாதேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

சிறப்பு விருந்தினராக திருக்குறள் பேரவையின் செயலாளர் தமிழ்ச் செம்மல் மேலை. பழனியப்பன் கலந்துகொண்டு திருக்குறளின் வழியாக மாணவிகளுக்கு பல அரிய கருத்துக்களை எடுத்துக் கூறி மாணவிகளை ஊக்கப்படுத்தினார். அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கலைப்புல தலைவர் சாந்தி வாழ்த்தி பேசினார்.

விழாவில் முதலாம் ஆண்டு மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பேனா மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இதில், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் தெய்வானை நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து