தமிழக செய்திகள்

தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அண்ணாமலை மேல்முறையீடு

ஐகோர்ட்டு நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்

தினத்தந்தி

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக நேரில் ஆஜராக நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியும் அண்ணாமலை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனது பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஐகோர்ட்டு நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என அண்ணாமலை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்