தமிழக செய்திகள்

அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தென்காசியில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி அருகே உள்ள மேலகரம் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் குடியிருப்பு பகுதியில் அண்ணாவின் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. மேலகரம் செயலாளர் சுடலை தலைமை தாங்கினார். தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், மேலகரம் நகர பஞ்சாயத்து தலைவி வேணி வீரபாண்டி, துணைத்தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி நகர தி.மு.க. சார்பில் காந்தி சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான சாதிர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...