தமிழக செய்திகள்

அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் போட்டி

அண்ணா பிறந்தநாள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தினத்தந்தி

மாரத்தான் போட்டி

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம்-தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 288 பேர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு (8 கி.மீ தூரம்) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி கரூர்-திண்டுக்கல் நெடுஞ்சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வெங்கக்கல்பட்டி பாலம் வழியாக சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

பரிசுகள்

25 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்களுக்கு (10 கி.மீ. தூரம்) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி மரத்தான் கரூர்- திண்டுக்கல் நெடுஞ்சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக மணவாடி பாரத் பெட்ரோல் நிலையம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெண்களுக்கு (5 கி.மீ. தூரம்) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி கரூர்- திண்டுக்கல் நெடுஞ்சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக சென்று வெங்கக்கல்பட்டி பாலம் ரவுண்டனா வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த மாரத்தான் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 2-ம் பெற்றவர்களுக்கு ரூ.-3 ஆயிரமும், 3-ம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.-2 ஆயிரமும் 4 முதல் பத்தாமிடம் வரை பெற்றவர்களுக்கு ரூ.ஆயிரம் என 28 பேருக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்