சென்னை,
வங்கக் கடலில் உருவாகியுள்ள, நிவர் புயல் தீவிர புயலாக மாறி நாளை மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று சுமார் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புயல் தொடர்பான பாதிப்புகள் குறித்து புகார்களை தெரிவிக்க 1077 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அவசர உதவிக்கு 04322-222207 என்ற எண்ணிலும், கடலூர் மாவட்டத்தில் 04142-220700, 233933, 221383, 221113 ஆகிய எண்களிலும், தஞ்சை மாவட்டத்தில் 93453 36838 என்ற எண்ணிலும் தொடர் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.