தமிழக செய்திகள்

கூட்டணி குறித்து 4 நாட்களில் அறிவிப்பு ஜி.கே.வாசன் பேட்டி

கூட்டணி குறித்து 4 நாட்களில் அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நிருபர்களிடம் கூறியதாவது;-

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். ஒத்த கருத்துடைய நிலை ஏற்பட்டவுடன் நானே 4 நாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன்.

தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி குறித்து இதுவரை இறுதி வடிவம் கொடுக்கவில்லை. டாஸ்மாக் கடைகளில் ஆதார் கார்டு குறித்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது நல்ல செய்தி. இளைஞர்களுக்கு அது ஒரு எச்சரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.