தமிழக செய்திகள்

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ 2,000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த 19-ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை முதல் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும். 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையில் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம் பெட்ரோல் பங்குகளில் சில்லறை தட்டுப்பாடுகள் ஏற்படாமல் இருக்க வங்கிகள் தடையின்றி 2000 ரூபாய் நோட்டிற்கான தகுந்த சில்லறைகளை வழங்கி உதவிட வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்