சென்னை,
திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி திமுக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.