தமிழக செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1,596 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,28,961 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பேர் (அரசு மருத்துவமனை 18, தனியார் மருத்துவமனை - 3) கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,094 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,534 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,77,646 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 16,221 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,60,195 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-

கோவை - 224, சென்னை - 186, ஈரோடு - 130, செங்கல்பட்டு - 108, தஞ்சாவூர் - 92

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்