தமிழக செய்திகள்

விமானம் மூலம் மேலும் 3 லட்சம் ‘‘கோவிஷீல்டு’’ தடுப்பூசிகள் தமிழகம் வந்தது

விமானம் மூலம் மேலும் 3 லட்சம் ‘‘கோவிஷீல்டு’’ தடுப்பூசிகள் தமிழகம் வந்தது.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் மே 1-ந்தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. இதனால் அதிக தடுப்பூசி தேவைப்படும் என்பதால் மத்திய அரசிடம் தடுப்பூசி வழங்கும்படி தமிழக அரசு கோரியிருந்தது. மேலும் ஏற்கனவே 69.85 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன. மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தேவைப்படும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்.

நேற்று வந்துள்ள 3 லட்சம் டோஸ் தடுப்பூசியையும் சேர்த்தால் மொத்தம் 70,85,720 டோஸ் தடுப்பூசி இதுவரை தமிழகத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்