தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று மேலும் 5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,502 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 46,806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 5,735 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,58,900 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,50,572 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,708 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78,711 பேருக்கு கொரோனா பரிசோதனைகளும், இதுவரை 58,58,300 பேருக்கு கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு