சென்னை,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,511 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,434 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 46,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 5,799 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,53,165 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 991 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,48,557 லிருந்து 1,49,583 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,761 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78,190 பேருக்கு கொரோனா பரிசோதனைகளும், இதுவரை 57,79,589 பேருக்கு கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.