தமிழக செய்திகள்

அனல்மின் நிலைய ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கோர்ட்டில் சரண்

திருச்செந்தூர் அருகே அனல்மின் நிலைய ஊழியர் கொலை வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் மேலும் ஒரு சிறுவன் சரண் அடைந்தார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் பிரசாத் நகரை சேர்ந்தவர் பாலகண்ணன் (வயது 40). இவர் கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 7-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி பேச்சியம்மாள் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மாயமான பாலகண்ணனை தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில், 5 பேர் கொண்ட கும்பலால் பாலகண்ணன் கொலை செய்யப்பட்டு வீரபாண்டியன்பட்டினம் ஜெ.ஜெ.நகர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் உடல் புதைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த பாலமுருகன் (வயது 19) மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். மேலும் திருச்செந்தூரை சேர்ந்த புறா ராஜா (24), சுரேஷ்கோபி மற்றும் 17 வயது சிறுவனை தேடி வந்தனர்.

அதில் புறா ராஜா கடந்த 14-ந்தேதி நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிலையில் 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் தூத்துக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார். சுரேஷ் கோபியை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்