தமிழக செய்திகள்

மற்றொரு திமுக அமைச்சரின் ஊழல் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது - எச்.ராஜா

மக்கள் பணத்தைச் சுரண்டி தின்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என எச். ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு-விற்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆதாரங்களில் ஊழலுக்கான முகாந்திரம் உள்ளதால், உடனடியாக வழக்குப் பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணையைத் துவங்க வேண்டுமென திமுக அரசுக்கு மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மனதார வரவேற்கிறேன்.

ஊழலில் கொழுத்த ஊர்ப் பெருச்சாளிகளைக் கண்டுகொள்ளாமல், ஆளும் அரசின் அவலங்களைச் சுட்டிக் காட்டும் சமூகவலைதளப் பிரபலங்கள் மீது மட்டும் பாய்ந்து பாய்ந்து போலி வழக்கு போட்டுக் கொண்டிருக்கும் திமுகவின் ஏவல்துறைக்கு, சட்டம் தனது பாணியில் மீண்டுமொருமுறை சவுக்கடி கொடுத்துள்ளது.

“திமுககாரன்” என்ற ஒற்றை அடைமொழியை வைத்துக் கொண்டு, மக்கள் பணத்தைச் சுரண்டி தின்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பார்வையில் இருந்து என்றும் தப்ப முடியாது என்பதற்கான சான்று இது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.