தமிழக செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய மற்றொரு நாகர்கோவில் பாதிரியார் கைது...!

வன்முறையால் பெண்களை மானபங்கபடுத்துதல் பிரிவின் கீழ் பாவூர்சத்திரம் போலீசார் பாதிரியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குளம்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள பிலிவர்ஸ் சர்ச்சில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாதிரியாராக இருந்து வரும் நாகர்கோவில் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டான்லிகுமார்.

இவர் சர்ச்சுக்கு வரும் பெண்களின் கைபேசி எண்களை பெற்று மத போதனை செய்கிறேன் என்றபேரில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாக சபை மக்கள் சார்பாக பெண் ஒருவர் ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பாவூர்சத்திரம் போலீசார் அவரை வன்முறையால் பெண்களை மானபங்கபடுத்துதல் பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் பாதிரியார் ஸ்டான்லி குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் பாதிரியார் ஒருவர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...