தமிழக செய்திகள்

கிண்டியில் ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

கிண்டியில் ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் வெறி தினேஷ் (வயது 25). ஆட்டோ டிரைவர். கடந்த 30-ந் தேதி இரவு 2 பேர் பட்டாக்கத்தியுடன் தினேசை ஓட ஓட விரட்டினர். இதனால் கிண்டி வண்டிக்காரன் தெருவில் உள்ள மளிகை கடைக்குள் புகுந்த அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இதுபற்றி அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆதம்பாக்கத்தில் ரவுடியின் கூட்டாளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்தது தெரிந்தது.

இதுதாடர்பாக ஏற்கனவே மணிகண்டன் (28), காமேஷ் (25), ஈஸ்வரன் (27), ஊசி உதய் (26), வசந்த் (19), தினேஷ் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த தீபக் (23) என்ற மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு