தமிழக செய்திகள்

நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியது

அருப்புக்கோட்டை அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியது.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை, 

தூத்துக்குடியில் இருந்து காளீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான லாரி சரக்கு ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை குலசேகரநல்லூரை சேர்ந்த மகாராஜன் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருக்கும்போது உடையநாதபுரம் விலக்கு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்னால் மகாராஜன் ஓட்டிச் சென்ற லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மகாராஜனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து லாரி உரிமையாளர் காளீஸ்வரன் பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சாலையோரம் லாரியை அஜாக்கிரதையாக நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்ததாக மற்றொரு லாரி ஓட்டுனர் கோபிநாத் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு