தமிழக செய்திகள்

பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி

மேலூர் அருகே பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்

தினத்தந்தி

மதுரை

தூத்துக்குடியில் இருந்து உப்பு மூடைகளை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்ற லாரி ஒன்று மதுரை மேலூர் அருகே உள்ள சத்யபுரம் வந்தபோது பழுதாகி நின்றது.

லாரியில் உள்ள பழுதை நீக்குவதற்காக சாலையோரமாக லாரியை டிலைவர் நிறுத்தி இருந்தார். பின்னர் லாரியின் அடியில் ஏற்பட்டுள்ள பழுதை டிரைவர் மந்திரமூர்த்தி, மாற்று டிரைவர் சண்முகசுந்தரமும் நீக்கி கொண்டிருந்தனர். அப்போது

சிவகாசியில் இருந்து பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற லாரி ஒன்று சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரியின் முன்பக்கத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் லாரியன் முன்பக்கம் முற்றிலும் சேதமானது.

இதில் பட்டாசு ஏற்றிவந்த லாரியின் டிரைவர் வரதராஜன் மற்றும் பழுதாகி நின்ற லாரியின் டிரைவர் மந்திரமூர்த்தி ஆகிய இருவரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மாற்று டிரைவர் சண்முகசுந்தரம் மட்டும் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து