தமிழக செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

திருவத்திபுரம் நகராட்சி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

தினத்தந்தி

செய்யாறு

திருவத்திபுரம் நகராட்சி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி சார்பில் போதை பொருள் ஓழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் ஆ.மோகன்வேல் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன், நகர மன்ற உறுப்பினர் கே.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.

பள்ளி மாணவ, மாணவிகள், நகராட்சி பணியாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியானது நகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய சாலைகளான ஆற்காடு சாலை, காந்தி சாலை, பஜார் வீதி வழியாக திருவத்திபுரம் வரை சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து நகராட்சி வளாகத்தில் அனைவரும் போதை பொருள் ஓழிப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்