தமிழக செய்திகள்

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை

நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்

நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

திடீர் சோதனை

உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டையில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகப்ரியாவின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட்மேரி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

வெள்ளிக்கிழமை

வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுவதில்லை.

எனவே அவ்வாறு அனுப்பப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT