தமிழக செய்திகள்

நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சேலம்,

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடு நடைபெறும் இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள்  மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையடுத்து சென்னையில் தொடங்கிய திமுக இளைஞரணியின் மாநாட்டு சுடரொளி ஓட்டம் இன்று சேலத்தை வந்தடைந்ததை அடுத்து சுடரை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதையடுத்து 1500 பேர் பங்கேற்ற நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்